Wednesday, September 13, 2023

ஒப்பாரி இன்னும் ஓயவில்லை

 ஒப்பாரி இன்னும் ஓயவில்லை 

கவிஞர். அன்பு முகைதீன்



அகவுரை

 

அகவுரை

 

 

      இலங்கையின் போர்க்கால நிகழ்ச்சி நிரல்களில் மிகக் கொடூரமானதும் நியாயப்படுத்த முடியாததுமான சம்பவம் அப்பாவி மனிதர்கள் மீதான தாக்குதல்கள் ஆகும். எல்லாத் தரப்புகளும் இதில் ஈடுபட்டிருந்தன என்பதுடன்,  இதற்கு எத்தரப்பும் இதுவரையும் உரிமை கோரவோ மன்னிப்புக் கோரவோ முன்வரவில்லை.. என்ன காரணத்துக்காக தாம் கொல்லப்பட்டோம் என்பதை உயிரிழந்த அந்த ஆத்மாக்கள் அறியவுமில்லை. அந்த கொல்லப்பட்ட மனிதரின் உறவினரின் மீளாத்துயரங்களுடன்  அக்காலங்கள் கடந்து போய்விட்டன.

 

1992 என்ற காலத்தில், என் கிராமமான சாய்ந்தமருது பொதுச்சந்தையில் வெடித்த  ஒரு குண்டில் என் உறவினர்கள் உட்பட  சுமார் 25 அப்பாவிப்பொதுமக்கள் பலியாகினர். பலர் காயமடைந்து அங்கவீனம் ஆயினர்.. இதைத் தொடர்ந்த தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தில், பலர் கடத்தப்பட்டனர். கடத்தல், கொலை, தீவைப்பு, என்பன அகோரத் தாண்டவமாடிய அந்த வேளையில் கூட, சில மனிதர்களின் மனிதாபிமானப் பண்புகள் மறைந்து விடவில்லை. ஒப்பாரிகளின் மத்தியில்  ஒற்றுமையை வலியுறுத்திய குரல்களும் உரத்து  ஒலிக்கத் தவறவில்லை.

 

இலங்கையின் வரலாற்றில், தமிழர்-முஸ்லிம்கள் ஆகிய இரு இனங்களையும் இரண்டு இறக்கைகளாகக் கொண்ட சமாதானப் பறவை ஒற்றுமை வெளிதனில் பறக்க எத்தனிக்கும் போதெல்லாம் சில அரசியல்வேட்டைக்காரரின் இனத்துவேஷ அம்புகள் எய்யப்பட்டே வந்திருக்கின்றன..ஆயினும், இரு இனங்களிலும் இன்னமும் வாழும்  விரிந்த நல் உள்ளம் கொண்ட மனிதர்களால், தமிழ்-முஸ்லிம் நல்லுறவு இன்றளவும் பேணப்பட்டே வருகின்றன...

 

இந்நிகழ்வுகளைப் பகைப்புலமாகக் கொண்டு இந்தக் குறுநாவலை 1992

களில் நான் எழுதியிருந்தாலும் பற்பல காரணிகள் நிமித்தமாக இதனை வெளியிடுவதில் ஒரு தயக்கம் இருந்தது. பழசெல்லாம் மறந்து  தமிழ்-முஸ்லிம் நல்லுறவு முகிழ்ந்து வரும் இவ்வேளையில், இதனை நான் வெளியிடுவதன் நோக்கம் என் ஊரின் யுத்தகாலம் அறியா தலைமுறைக்கு தம் மூதாதையரின் சிரமங்களும், மனிதாபிமானமும் எத்தகையன என்பதை ஒரு புனைவு ஆவணமாக கையளிக்க வேண்டும் என்கிற ஒரு சமூகப்பணியே தவிர வேறொன்றுமில்லை.

 

தமிழ்-முஸ்லிம் நல்லுறவுக்காக அன்று தொடக்கம் இன்று வரை பணியாற்றி வரும் சில நல்ல இதயங்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்..

 

‘’மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்’’

புனித அல்குர்ஆன் வசனம். 4:1

 

 

ஆர்.எம் . நௌஷாத்.

2023.09.05

Blogspot; Theeran 1959.com  (தீராவெளி)

Facebook; R.M.Nowsaath

Email;rmnawshad@gmail.ccom.

Phone;0774781250

முழு அட்டை

 முழு அட்டை



பின் அட்டை

 பின் அட்டை